மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
PDF Title ✒ |
Circular for TN Teachers PDF |
PDF Language ❖ |
Tamil |
PDF Category ❴ ❵ |
Education PDF |
Published (Updated) ➽ |
28 April 2021 |
PDF Size ⚀ |
476 KB |
PDF Pages ♯ |
PDF Download Link ⇓ |
பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 0063/பிடி1/ இ1/ 2021, நாள் : 28.04.2021
பொருள்: பள்ளிக் கல்வி – அரசுஅரசு உதவி பெரும் பள்ளிகள் – 2020-21 ஆம் கல்வியாண்டு – ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்தது.
2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்ததால் , 22.03.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட் -19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை. எனினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும். மேலும் , ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு , இது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.